இறப்பதற்கு முன்பாக தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை மேக்னாராஜ் தற்போது தெரிவித்துள்ளார்.
நடிகை மேக்னா ராஜ் பிரபல கண்ணட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி இறந்தபோது மேகனா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தன் கணவர் எந்த மருத்துவமனையில் டெலிவரி பார்க்க வேண்டும் என்று விரும்பினாரோ அதே மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜூன் 7ஆம் தேதி என்ன நடந்தது என்பதை குறித்து மேகனா ராஜ் தற்போது பேட்டியளித்துள்ளார். எப்பொழுதும் போன்று சாதாரண நாளாகவே அந்த நாளும் ஆரம்பித்தது.
நானும், துருவா, அவரது மனைவி ஆகியோர் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சிரஞ்சீவி மயங்கி விழுந்து விட்டதாக என் மாமனார் தெரிவித்தார். நாங்கள் உடனே அங்கு சென்று அவரை பார்த்தும் அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். பின்னர் கொஞ்சம் லேசாக அவருக்கு சுயநினைவு வந்தது. உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்யாமல் தாங்களே காரை எடுத்து அவரை அழைத்து சென்றோம். மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினர்.
அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தது. இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் கடைசியாக என்னிடம் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு இருந்தபோதே “என்னைப் பார்த்து நீ டென்ஷனாக வேண்டாம், எனக்கு ஒன்றும் ஆகாது” என்று அவர் கூறினார்.
மேலும் மேகனா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு ஒரு அழகான பொம்மை ஒன்றை வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிரஞ்சீவி இறந்தபோது மருத்துவமனையில் அவருக்கு அருகில் அந்த பொம்மை இருந்தது. குழந்தை பிறக்கப் போகிறது என்பதை ரசிகர்களிடம் தெரிவிக்க சிரஞ்சீவி திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்பாவாக போவதை அறிவிக்கும் முன்னரே அவர் உயிர் இழந்து விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.