வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவர உள்ளது. அது வாட்ஸ்அப்பின் terms and privacy policy updates- ஐ கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லை என்றால் உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியுள்ளது. இது பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியான அறிவிப்பில், “பயனாளர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்படி பயனாளர்கள் தங்களின் ஷாட்களை சேமிக்கவும், ஃபேஸ்புக் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
அதனால் நீங்கள் வாட்ஸ்அப் தொடர்ந்து உபயோகிக்க வேண்டுமானால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளுக்கு must agree என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் இந்த புதிய நிபந்தனைகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.