நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்துக்களை அதிரடியாக பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. ரஜினி கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன் பிறகு அது பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.