நாடு முழுவதும் விவசாயிகள் இன்று நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. அந்த போராட்டத்தால் நாடு முழுவதும் பொது போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை.
மேலும் தமிழகத்தில் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்து, வேன் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பெரிய மார்க்கெட்களில் மற்றும் மீன் அங்காடிகள் திறக்கப்படாமல் முழுவதும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சிலர் #பந்த்-வேண்டாம்-போடா என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.