இனிமேல் கொரோனா பரிசோதனையை செல்போன் மூலமாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கோரோணா பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளது.
இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்த பிறகு அதன் முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை செல்போன் மூலமாக 30 நிமிடங்களில் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதன்படி ஆர்என்ஏ ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும், செல்போனில் இணைக்கப்படும் கருவியின் மூலமாக பரிசோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.