பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான புரோமோக்கள் வெளியாகியிருந்தது. அதில் போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. பாலா தலைமையில் மனிதர்கள் அணிக்கும் அர்ச்சனா தலைமையில் ரோபோக்கள் அணிக்கும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும். இதனால் போட்டியாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது .
இந்நிலையில் மூன்றாவது புரோமோவில் ஆரி மற்றும் ரமேஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கோபமாக வந்த நிஷா, ‘எவ்வளவு நேரம் அவரை டார்ச்சர் பண்ணுவீங்க ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என்று சொன்னதே நீங்கதான அவர் எந்த வேலையும் செய்யாத நீங்க பாத்தீங்களா’ என ஆவேசமாக பேசுகிறார். இதற்கு ஆரி ‘உங்களப் பத்தி கேட்டா இவங்களுக்கு ஏன் கோவம் வருது ஏன் நீங்க இப்படி பேசாதீங்கன்னு சொல்லுங்க பாப்போம்’ என ரமேஷிடம் கேட்கிறார் . இப்படியாக இன்று வெளியான இந்த 3 புரோமோக்களால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day65 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/1ahtljtPeO
— Vijay Television (@vijaytelevision) December 8, 2020