பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென எடுத்த முடிவை ட்விட்டர் வாசிகள் அனைவரும் கலாய்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.
உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். தினம் தோறும் லட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ட்விட்டரில் 12.9 மில்லியன் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர். அதனால் ‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கானை மக்கள் வெறுக்கிறார்கள்’என ட்விட்டர் வாசிகள் அவரை ட்ரோல் செய்தனர்.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த இம்ரான் கான் தனது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் உட்பட தான் பின்தொடர்ந்த அனைவரையும் அன் பாலோவ் செய்துள்ளார். ஆனால் இம்ரான் கானின் இந்த செயலையும் ட்விட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.