Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழைக்கு  வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!!

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு  மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு  சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

மே  4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை வானிலைமையம் க்கான பட முடிவு

 

திண்டுக்கல், தருமபுரி,தேனி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர்,  விருதுநகர், கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதுவரை ,நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்  7 சென்ட்டி மீட்டரும் ,தேனி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டரும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

Categories

Tech |