நடிகர் விஜய் சேதுபதி ‘லாபம்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாவது குறித்து பரவிய வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன் ,ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் பரவியது .
‘லாபம்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது நேரடியாக ஓடிடி தளத்தில் தான் வெளியாகும் என பரவிய தகவலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி லாபம் திரைப்படம் முதலில் தியேட்டரில்தான் வெளியாகும் அதன்பின்தான் ஓடிடியில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.