தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டு முதல்வர் முடிவு செய்வார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து சிபிஎஸ்இ, தமிழக அரசின் நிலைப்பாட்டை கோரியிருந்தது. மேலும் கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு எப்போது வேணாலும் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.