இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருமென தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஆறு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. அதனால் சீரம் மற்றும் பாரத் நிறுவனங்கள் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெற விண்ணப்பம் செய்துள்ளது. இது குறித்து பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிக்கு உரிமம் பெறலாம் என தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவில் மிக விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.