அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பொழிவு அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.