Categories
தேசிய செய்திகள்

“தயாராகும் இந்தியா”… ஏற்பாடுகள் என்னென்ன..? தடுப்பூசி கிடைக்குமா..!!

தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் covid-19 தடுப்பூசிகளின் சோதனையில் வெற்றி பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் நேற்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகிவருகிறது. தடுப்பூசியை சேமித்து வைக்க குளிர் சேமிப்பு வசதிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்களுக்காக முதற்கட்டமாக மூன்றுகோடி தடுப்பூசிக்கு இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. தடுப்பூசிகளை சேமித்து வைக்க போதுமான வசதிகள் இருப்பதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதியோருக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்காக டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் குளிர்பதன கண்டெய்னர்கள், குளிர் மண்டலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த சில வாரங்களில் இந்தியாவிற்கு நிச்சயம் தடுப்பூசி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க வேண்டும். தவறினால் தடுப்பூசி கெட்டுவிடும். புதிய தடுப்பூசிகளை ஆர்டர் கொடுக்க வேண்டிய நிலை உண்டாகும். எனவே குளிர் நிலையில் சேமித்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

Categories

Tech |