கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார்.
அதில் மாணவியின் தந்தை அவரது உறவுக்கார பெண்ணுடன் தனியாக இருக்கும் காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை மாணவி சென்று அவரது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனைவி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இருவரையும் அழைத்து பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோது தனக்கு கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், எனக்கு துரோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.
அதற்கு போலீசார் இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது, வேண்டுமென்றால் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய காரணத்திற்காக வழக்கு பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளனர். என்ன மனைவி கோபித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆன்லைனில் பாடம் கற்பிக்க செல்போன் வாங்கிய மாணவியால் குடும்பமே இரண்டாகப் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.