Categories
மாநில செய்திகள்

8 மாதமாக தூங்கிய தமிழக அரசு… கண்டனமும் நன்றியும்… ஸ்டாலின்…!!!

தமிழ்வழி படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் 20 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு 8 மாதமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரு நாட்களுக்கு முன்பு கேட்டேன். ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்துள்ளது. நன்றி.. எட்டு மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்கு கண்டனங்கள்..”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |