சென்னையில் குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் நோய் உண்டாவதற்கு தூய்மை இல்லாதது தான் முக்கிய காரணம். அதனால் அனைத்து நாடுகளும் தூய்மையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்கங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குப்பைகளை அகற்றுவது விதிமீறல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அறிவியல் முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், வரும் காலங்களில் குப்பைகளை அகற்ற படாதது தொடர்பாக செய்தி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விதி மீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.