தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சில தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தின. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் நடக்க இருந்த அரையாண்டுதேர்வு களையும் ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகள் வேண்டும் ஆனால் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக மாதிரி தேர்வாக நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.