Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்போ இல்லைனா…. எப்பவும் இல்லை….. ரஜினி மீண்டும் ஆலோசனை …!!

தமிழருவி மணியன்ம், அர்ஜுன மூர்த்தி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் புதுக் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனன் மூர்த்தியும்,  மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்த நிலையில், அவருடைய சகோதரரை சந்தித்து ஆசி பெறுவதற்காக பெங்களூர் சென்று வந்தார்கள்.

இந்தநிலையில் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்  ஆலோசனை செய்கிறார். தொடங்க கூடிய புது கட்சியை தமிழகத்தில் எங்கு தொடங்குவது ? மாநாடு நடத்தி சென்னையில் தொடங்குவதா ? மதுரை, நாகை, வேளாங்கண்ணி போன்ற பகுதிகளில் தொடங்குவதாக  என ஆலோசிக்கிறார்.

அதேபோல போஸ்டரில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் புகைப்படம் மட்டுமே இடம் பெற வேண்டும்.அர்ச்சுன மூர்த்தி, தமிழருவிமணியன், மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் படத்தையும் போஸ்டரில் பயன்படுத்த வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றயத்தினருக்கு  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |