சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நிவர் மற்றும் புரெவி என்று இரண்டு புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்தன. இதன் காரணமாக வட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. பல இடங்களில் அதிக கன மழை பெய்து வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இயல்பை விட 9% அதிகமான மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் 47% மழை அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக பதிவாக வேண்டிய அளவு 69. 8 சென்டி மீட்டர், ஆனால் இன்றுவரை பதிவாகியிருக்கும் மழையின் அளவு 102.7 சென்டிமீட்டர் ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தை நாம் பார்க்கும் போது இயல்பான மழை அளவு 39.4 சென்டிமீட்டர், ஆனால் அக்டோபர் 1ஆம் தேதி வரை இன்றுவரை பதிவாகி இருக்க கூடிய மழை அளவு 49.2 சென்டிமீட்டர். இது இயல்பை விட ஒன்பது சதவீதம் அதிகமாகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகபட்ச மழை பதிவு இருக்கக்கூடிய மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆக இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி வரை இன்று வரை இயல்பாக பதிவாக வேண்டிய மழை அளவு 24.6 சென்டிமீட்டர், ஆனால் 38.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 56 சதவீதம் அதிகமாகும்.