Categories
மாநில செய்திகள்

8 வழிசாலை தீர்ப்பு… எனக்கு ஏமாற்றமே… டிடிவி தினகரன் டுவிட்…!!!

சேலம் மற்றும் சென்னை எட்டு வழி சாலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற வழக்கில் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் இதை எதிர்க்காத ஸ்டாலினுக்கு வேண்டுமானாலும் தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம். மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எட்டு வழிசாலை செயல்படுத்த முதல்வர் பழனிசாமி அரசு முனையக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |