Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் வட்டி தள்ளுபடி… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வகை கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வங்கியில் உள்ள வட்டி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் படைத்து வகைகள் அமைக்கும் வட்டியை தள்ளுபடி செய்வது வங்கிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது வங்கியின் அடிப்படை செயல்பாட்டை சீர் குலைக்கும் என்றும், வட்டி தள்ளுபடி யோசிக்க கூட முடியாது என்பதால் மாதத்தவணைகளை தாமதமாக செல்ல அனுமதி அளித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |