Categories
அரசியல் மாநில செய்திகள்

காலைல பேசிட்டேன்…. என்னோட செலவு… டைம் சொல்லுங்க… திமுகவுக்கு சவால் …!!

2ஜி வழக்கு குறித்து திமுக – அதிமுக இடையே உச்சகட்ட மோதல் நடந்து கொண்டு இருக்கின்றது.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக மக்களைவை உறுப்பினர் ராஜா அம்மா வழக்கை கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அம்மாவின் வழக்கு முடிவு பெற்றுவிட்டது.

உச்ச நீதிமன்றம் முடித்து வைத்த வழக்கு பற்றி இவர் பேசுவது எதற்காக ? அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ராஜா ஒரு வழக்கறிஞர், ஜோதி ஒரு வழக்கறிஞர், ஜோதி ஒரு 30 நிமிடங்களுக்கு மேலாக திமுகவையும்,  ராஜாவையும் கிளிகிளியென கிளித்துள்ளார். இதில் நான் கூறுவது இரண்டு வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளலாம்.

வழக்கறிஞ்சரிடம் காலையில் பேசினேன் நான். நீங்க பேட்டி கொடுக்கும் போது சொல்லுங்க…. நேரம் முடிவு செய்யுங்க…. நான் வருகின்றேன், எந்த இடம் என்று சொல்லுங்க, நான் என்னுடைய செலவில் மேடை போட்டு, எல்லாமே ரெடி பண்ணி, எங்கள் வழக்கறிஞர் ஜோதியை அழைத்துக் கொண்டு வருகின்றேன். நீங்கள் வர தயாரா ? முதலில் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அதன் பிறகு நாங்கள் நேரடியாக வந்து வாதம் செய்கிறோம் என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |