Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைவடைந்தது ‘கர்ணன்’ படப்பிடிப்பு… நடிகர் தனுஷின் நன்றி ட்விட்…!!

‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதேபோல் இவர் நடிப்பில் பாலிவுட்டில் ‘அட்ரங்கிரே’ என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்ததாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘கர்ணன் படப்பிடிப்பு முடிந்தது. இதை எனக்கு வழங்கியதற்கு மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் தாணு அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி . இந்த சிறப்பு படத்திற்காக நீங்கள் வழங்கிய சிறப்பு மிகுந்த இசைக்கு சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.இதையடுத்து நடிகர் தனுஷுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |