Categories
சினிமா தமிழ் சினிமா

சிவானியிடம் கண்களில் கண்ணீருடன் உருக்கமாக பேசிய பாலா… வெளியான மூன்றாவது புரோமோ…!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடும்போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து அவரை எச்சரித்தார்.

மேலும் தலைவர் பதவிக்கான போட்டியில் எழுந்த பிரச்சனை குறித்து குறும்படம் ஒன்றை போட்டுக்காட்டி பாலாஜிக்கு புரிய வைத்தார். இதையடுத்து பாலாஜிக்கு  மெண்டல் பிளாக் இருக்கின்றது என்று கமல் கூறியபோது பாலாஜியின் முகமே மாறி விட்டது. இதுகுறித்து சிவானியிடம் பேசும்போது ‘கமல் சார் மெண்டல் பிளாக் எனக்கு இருக்கு என்று சொன்ன போது பாலாவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லைன்னு யாராவது எனக்கு சப்போர்ட் செஞ்சாங்களா ?அந்த நேரத்துல நான் எந்த அளவுக்கு அதிகப்பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்’ என கண்களில் கண்ணீருடன் பேசுகிறார் பாலாஜி .

Categories

Tech |