Categories
சினிமா தமிழ் சினிமா

பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டி விட்டார்… ‘பாவக் கதைகள்’ படம் குறித்து சாய்பல்லவி பேட்டி…!!

‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பேட்டி அளித்துள்ளார் .

தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் பாவக் கதைகள். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவு என்ற பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.

சமீபத்தில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் ‘படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் என்னை மிரட்டி விட்டார். அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்காக ஒளி வீசும் . படப்பிடிப்பு தளத்திற்குள் அப்பாவாகவே நுழைத்தார் . நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன் . அவர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருந்தார். அவருடன் பணி புரிவதை  மிகவும் ரசித்தேன். எனது மருத்துவ படிப்பை பற்றி விசாரித்தார்,அதை பயிற்சி செய்ய என்னை வலியுறுத்தினார்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |