டீக்கடை முதல் மால்கள் வரை பொது இடங்களிலும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது இடங்களில் பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பெற பிஎம் வாணி என்ற பெயரில் இலவச வைபை சேவையை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமையும் இல்லை, பதிவும் இல்லை, கட்டணமும் பொருந்தாது.
அவை சிறிய கடைகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆக கூட இருக்கலாம்” என்று தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மேலும் கொச்சி மற்றும் லட்சத்தீவுகள் க்கு இடையே நீரில் மூழ்கி ஆப்டிகல் பைபர் கேபிள் இனைப்பை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.