Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்றீங்களா… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். நேரில் சென்று செய்வதற்கு சிரமப்படுவதால் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் rs.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.

பேடிஎம் மூலம் முதல்முறையாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும். அதில் கட்டணம் செலுத்துவதற்கு முன்பு FIRSTLPG என்ற குறியீட்டை பதிவிட்டு, பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே கேஷ்பேக் பெறமுடியும். இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |