நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.அவை அனைத்திற்கும் இணைய சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. PM WANI என்ற பெயரில் வைஃபை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாமல் வைஃபை சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொச்சி மற்றும் லட்சத்தீவுகள் இடையே ஆப்டிகல் பைபர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.