வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் அப்டேட் செய்யப்பட்ட பிறகு வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாட்டில் ஷாப்பிங் செய்வதற்கான கார்டு என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற செய்திகள் போலவே விருப்பமானவற்றை வாட்ஸ்அப் கார்டில்சேர்த்துக் கொள்ளும் வசதியும் விற்பனையாளர்கள் மற்றும் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.