Categories
சினிமா தமிழ் சினிமா

சபர்ணாவில் தொடங்கி சித்ரா வரை… சின்னத்திரையில் இத்தனை தற்கொலைகளா …? வெளியான அதிர்ச்சிப் பட்டியல்….!!

ஏராளமான நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் அதன் அதிர்ச்சிப் பட்டியலை  இப்பொழுது காணலாம்

தமிழகத்தில் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அவ்வரிசையில் சித்ராவினுடைய  மரணம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சித்ரா மட்டுமல்ல இன்னும் சின்னத்திரையில் பிரபல நடிகர் நடிகைகள் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சித்தி போன்ற பல சீரியல்களில் நடித்த சாருகேஸ்  அவர்கள் பணப் பிரச்சனையால் 2004இல் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

2006இல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி அவர்கள் காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்.

வம்சம் தென்றல் போன்ற பல சீரியல்களில் நடித்த முரளி மோகன் 2014 ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார் சீரியல் வாய்ப்பு கிடைக்காததால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

பாலாஜி யாதவ் அவர்கள் அரசி போன்ற  பல தொடர்களை இயக்கி டிவி சீரியலில் இயக்க வாய்ப்பு இல்லாததால் மன அழுத்தம் ஏற்பட்டு கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார்.

சின்னத்திரை சோபனா அவர்கள் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் இவர் வடிவேல் போன்ற பல நகைச்சுவை கலைஞருடன் நடித்து பிரபலமானவர், சோபனா உடல்நலம் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்த மயூரி 2005ஆம் ஆண்டு வாழ்க்கையில் நாட்டம் இல்லாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துவிட்டார்.

இந்தியில் டப்பிங் சீரியஸான மண்வாசனை சீரியல் நடித்தவர்தான் பிரதியூஷா அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் மின்விசிறியில் துப்பட்டா போட்டு தூக்கு மாட்டி தற்கொலை ளை செய்துகொண்டார் .மன உளைச்சலால் இவர் இந்த முடிவை எடுத்ததாக  கூறப்படுகிறது.

சாய் பிரசாத் அவர்கள் பாரதி திரைப்படத்தில் அறிமுகமானவர் இவர் பல சீரியல்களில் நடித்து வந்த போது மார்ச் மாதம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.

சபர்ணா சொந்தபந்தம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் இவர் தனது வீட்டில் தற்கொலை செய்தார்.

சித்ரா இவர் விஜய் டிவியின் வீ .ஜே மேலும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் சித்ரா.இவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Categories

Tech |