நாட்டில் இனி வரும் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது உணவு மட்டுமே. அந்த உணவை தயாரிப்பதற்கு விவசாயிகள் அனைவரும் பெரும் பாடுபடுகின்றனர். அவர்களின் உழைப்பால் வருவதையே நாம் உணவாக உட்கொள்கிறோம். இந்நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழகம் சாதனை படைத்தது.
ஆனால் இந்த வருடம் தஞ்சையில் 1.35 லட்சம் ஹெக்டேர், நாகையில் 1.40 லட்சம் ஹெக்டர், திருவாரூரில் 1.40 சர்ச்சம் ஹேக்டர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கனமழையால் தஞ்சையில் 10 ஆயிரம் ஹெக்டேர், நாகையில் 70 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூரில் 60 ஆயிரம் ஹெக்டேர் நீரில் மூழ்கியதால் வரும் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.