கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் 2020ஆம் ஆண்டின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.
அதில் சூர்யாவின், “சூரரைப்போற்று” திரைப்படம் அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களில் இரண்டாம் இடம்பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் “தில் பேசரா” என்ற திரைப்படம் உள்ளது. இது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்த திரைப்படம் ஆகும். இயக்குனர் ராகவா லாரன்ஸின் திரைப்படமான “லட்சுமி” 6 ஆம் இடம் பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தமிழ் திரைப்படமும், இந்தி படத்தை இயக்கிய தமிழ் இயக்குனரும் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது தமிழ் சினிமாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளது.