Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

மழை பொழிவா ? இந்த உணவுகளை கொடுங்க… அப்புறம் குழந்தைகளின் மாற்றத்தை பாருங்க..!!

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து, குழந்தைகளை பாதுகாப்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு  சக்தியானது மிக குறைவாகவே காணப்படும்.அவர்கள் வளர்ச்சி அடையும் போது தான், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க செய்யும். எனவே மழை காலங்களில் நோயானது குழந்தைகளுக்கு  தாக்கத்தை ஏற்படுத்துவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மழையின் காரணமாக நமது சுற்றி இருக்கின்ற இடங்களில், ஈரப்பதத்துடன்  காணப்படுவதால், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியானது அதிகரித்து விடுவதால், எளிதில் உடம்பில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தான் மிகவும் வேகமாக நோய்த்தொற்றுகள் ஏற்படும்.

எனவே மழைக்காலங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால்,எளிதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருள்களை கொடுப்பதால் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
 மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் எந்த ஒரு காய்கறியோ அல்லது  பழங்களையோ,   வினிகர் கலந்த தண்ணிரில் போட்டு, நன்கு கழுவியப் பின்பு குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு பொருள்களைப் பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
முட்டை:

நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்க்க வேண்டிய உணவு என்றால் முட்டையும் ஒன்று. முட்டைகளில் அதிக அளவு  புரோட்டீன் சத்து நிறைந்துள்ளதால் இதனை  மழைக்காலத்தில் தவறாமல் தினமும் ஒன்று குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால்,அதிலுள்ள  புரோட்டீன்கள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துகள் நிறைந்துள்ளதால், இதிலுள்ள சத்துக்களானது, மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

பழங்கள்:

மழைக்காலங்களில் சீசனில் காய்க்கும் பழங்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.  சீசனில் காய்க்கும் பழங்களை சாப்பிடுவதால், அந்த சீசனில் உருவாகும்  நோய்களை, எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.  மேலும் பழங்களை ஜூஸாக அரைத்தோ  கொடுக்கலாம் அல்லது அப்படியே சாப்பிடக் கொடுக்கலாம்.

பாதாம்:

நாள்தோறும் சிறிதளவு தண்ணீரில் பாதாம் பருப்பை போட்டு உறவைத்து, தோல் உரித்தோ அல்லது சாதாரண பருப்பையோ, பாதாமை அரைத்து அதனை பாலுடன் சேர்த்தோ, குழந்தைகளுக்கு கொடுப்பதால், கண் பார்வையை கூர்மையாகவும், அழகான சருத்தை பெறவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பாதமானது உடம்பிற்கு பெரிதும் உதவிப் புரிகிறது.

சூப்:

வாரத்திற்கு 4 அல்லது 5 நாள்கள் சூப் செய்து குடிப்பதால், மழைக்காலத்தில் ஏற்படும் குளிரைப் போக்க சூப் பெரிதும் உதவுகிறது. மேலும் இதனை குழந்தைகளுக்கு தினமும் குடிக்க கொடுத்து வந்தால்,  உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி, சூப்பில் சேர்க்கப்பட்ட காய்கறிகளானது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து பாத்துக்க உதவுகிறது.

பருப்பு வகைகள்:

பருப்பு வகைகளை உணவில் சேர்த்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதால், இதில் உள்ள புரோட்டீனானது  உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பித்து கொள்ளவும், புரோட்டீன் பெரிதும் உதவுகிறது.  பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதால், மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களின் தாக்கத்திலிருந்தும், உடலில் உள்ள செல்கள் அதிகம் பாதிக்கப்படுத்தவும், பருப்பு வகைகளானது பெரிதும் உதவுகிறது.

Categories

Tech |