சிறையில் இருக்கும் சசிகலா கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்று மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறையில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் என்பதால் சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சிறு தொட்டிகளில் தர்பூசணி மற்றும் காளான் வளர்த்து பணம் சம்பாதித்துள்ளார். வேலூர் சிறைக்கு வரும் கன்னட ஆசிரியர்களிடம் கன்னடம் கற்க தொடங்கி, அதில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதனால் சிறையிலிருக்கும் சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.