Categories
சினிமா தமிழ் சினிமா

ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி… வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய வாய்ப்பு…!!

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ‘சனம் செட்டி வெளியேற்றப்பட்டது நியாயமில்லை’ என கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். மேலும் அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சனம் செட்டி நுழைய வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |