பாலாவும் சிவானியும் உரையாடிக் கொண்டிருக்கும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள் சிவானி மற்றும் பாலாஜி. இவர்களுக்கிடையே உள்ளது அன்பா? காதலா? என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சந்தேகம் உண்டு. பிக் பாஸ் வீட்டுக்குள் சிவானி பாலாவிடம் மட்டுமே அதிக நேரம் செலவிடுவார் . நேற்றைய எபிசோடிலும் பாலா சிவானியிடம் கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் உரையாடலின் போது ஏற்பட்ட மன வருத்தம் குறித்து பேசி கண் கலங்கினார் .
#Day67 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/DmVy9ea4Cf
— Vijay Television (@vijaytelevision) December 10, 2020
இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோ இருவரும் உரையாடுவது போல வெளியாகியுள்ளது. செல்லமாக பாலாவின் கன்னத்தில் சிவானி அறைந்து ‘உன் ரவுடி தனத்த இந்த காட்டாதன்ன’ எனக்கூற ‘உன் பேச்சில் திமிர் தெரியுதே’ என்கிறார் பாலாஜி. சனம் தான் உனக்கு அழகா பட்டம் கொடுத்துட்டே இருப்பாங்க அவங்களும் போய்ட்டாங்க.. நீ பட்டம் கொடுக்க ஆளில்லாமல் ஓவரா ஆடுர என சிவானி கூற … நீயும் போயிட்டா அதுக்கும் ஆள் இருக்காது என்கிறார் பாலாஜி. இதனால் பாலாவின் கையை பிடித்து இழுத்து ‘என்ன நான் போய்டா நீ இருப்பியா?என்கிறார் சிவானி . இப்படியாக மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது.