கோழிகளில் உண்டாகும் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவி விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவல் மோசமடைந்துள்ளதால், மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை கொல்லப்பட்டுள்ளன. நோயை உண்டாக்கக்கூடிய H5 வைரஸ் வகை பறவை காய்ச்சல் ஜப்பானின் 8 மாவட்டங்களில் பரவி உள்ளது. எனவே இந்த எட்டு மாவட்டங்களிலும் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த தொற்று ஏற்பட்ட கோழிகளின் இறைச்சிகள் மற்றும் முட்டையில் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய முடியாது.
எனவே இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவிவிடும் என்று அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து கோழிப் பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கத்தை விட கூடுதலாக கவனத்தில் இருக்க வேண்டும் என்று என்று ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் கட்சுநோபு கடோ தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 23.6 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இதேபோல அரேபிய நாடுகளிலும் பறவை காய்ச்சல் பரவி வருவகின்றன.
எனவே அங்கும் லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு கோழி இறைச்சி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் அண்டை நாடான தென் கொரியாவிலும் பல லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா வைரசால் உலகமே திணறி வருகின்றது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன.