Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளை பார்த்து விட்டு செல்வார். அதுபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கிடைத்ததால் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது மனைவி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கணவன் தூங்கி விடும் நேரங்களில், வீட்டில் இல்லாத நேரங்களில் செல்போனில் மூழ்கி இருந்துள்ளார். இதுகுறித்து சசிகுமார் பிள்ளைகளிடம் விசாரித்துள்ளார். அப்போது நீங்கள் வெளியூரில் வேலைக்கு சென்று வந்த காலங்களில் அம்மா அடிக்கடி வெளியில் சென்று விடுவார் என்றும், செல்போனில் பலரிடம் பேசி கொண்டிருப்பார் என்றும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் மனைவியிடம் இது குறித்து கேட்கவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சசிகுமார் மனைவியை சாப்பாடு போட சொல்லி சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவு 11 மணியளவில் பிரியா ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணையை 3 பேர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பிள்ளைகள் இரண்டு பேர் முகத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறிக் கொண்டு வெளியே ஓடி வந்தனர் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் உடல் முழுவதும் தீ பற்றி நிலையில் அலறிக் கொண்டிருந்த சசிகுமார் மீதும் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர்.

இதையடுத்து மூன்று பேரையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிள்ளைகள் இரண்டு பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சசிகுமாரின் தாயார் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரியாவிடம் விசாரணை நடத்திய போது கணவன் வெளியூரில் குடும்பத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் நேரத்தில், சமூக வலைதளங்களை பயன்படுத்தி பலருடன் தொடர்பு வைத்திருந்தார். அதில் சிலருடன் திருமணத்தை மீறிய பழக்கத்தை ஏற்படுத்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த வாழ்க்கைக்கு பிள்ளைகளும், கணவரும் தடையாக இருந்த காரணத்தினால் அவர்களை கொலை செய்ய முடிவு செய்து இவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |