பூமியில் உள்ள பூச்சி இனங்கள் அழிவது மனித இனத்தின் வாழ்க்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சில உயிரினங்கள் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையிலும், கேடு விளைவிக்கக் கூடிய வகைகளும் உள்ளன. அதனைப் பற்றி சரியாக அறியாமல் மக்கள் பல்வேறு உயிரினங்களை அழித்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு தான் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் பூமியில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் வகை உயிரினங்களில் பாதி பூச்சி இனங்கள் தான்.
அவற்றில் பட்டாம்பூச்சிகள், தும்பிகள், வண்டுகள், எறும்புகள், ஈக்கள் மற்றும் குளவிகள் உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிவது மனித இனத்தின் வாழ்க்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் மனிதன் தலையிடுவதும் சூழல் மாசும் தான் இந்த அழிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.