நாடு முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு தவிர மற்றவை இயங்காது என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் மருத்துவமனைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.