Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே… டிசம்பர் 17 முதல் 30 வரை… தேர்வு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவி வருகிறது.

இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைன் மூலமாக டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்முறை தேர்வுகள் இணையம் மூலம் பிரபல வீடியோ சேவைகள் மூலம் நடத்தப்பட வேண்டும். இந்த ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும். செய்முறை தேர்வை எழுதி முடித்த பிறகு, அதன் ஸ்கேன் செய்யப்பட்ட, மாணவர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு நடத்துபவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |