வலையில் சிக்கிய பெரிய சுறாவை மீனவர்கள் கடலில் விடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
மீனவர்களின் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பண்டைய காலத்தில் வணிகம் செய்ய கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்புவார்களா? மாட்டார்களா? என்ற பயம் இருந்து வந்தது. அந்த பயம் அப்போதும், இப்போதும் இருப்பது மீனவர்கலின் தொழிலில் மட்டும் தான். போகும் போது எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது அவர்களுக்கு தெரியாது. எவ்வளவு உயிர் மிஞ்சும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இயற்கை சீற்றம் ஒருபுறமும், எதிரி நாட்டுப் படையினர் மறுபுறமும் படகுகளை காத்திருக்கும். இந்த நிலையிலும் கூட அவர்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர். எல்லா தொழிலிலும் பெரிதாக தனக்குக் கிடைத்ததை வைத்து பணம் ஆக்குவது தொழில் தர்மமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் மீனவர்களின் தொழிலில் அப்படி இல்லை. தங்களுக்கு தேவையான பெரிய மீன்கள் வலையில் சிக்கும் பட்சத்தில் அவர்கள் அதை மீண்டும் கடலில் கொண்டு விட்டு விடுவார்கள். இதற்கு சான்றாக தற்போது வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று விளங்குகிறது. இந்த வீடியோவில் உள்ளவர்கள் கேரள மீனவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் பெரிய திமிங்கல சுறா ஒன்று சிக்கியுள்ளது. அதன் மீது பாசம் கொண்ட அந்த மீனவர்கள் அதை கயிறு கட்டி மீண்டும் கடலிலேயே விட்டு விடுகின்றனர். இந்த வீடியோவை சுபம் ஜெயின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/i/status/1336566869025669120