சிறுவன் ஒருவர் பட்டத்துடன் சேர்ந்து பறந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில், லாம்புங்கில் உள்ள ஒரு பகுதியில் பொதுமக்கள் ஒன்றாக கூடி பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 12 வயது சிறுவன் ஒருவனும் அக்கூட்டத்தோடு சேர்ந்து பறக்க விட்டிருக்கிறார். அது மிகவும் நீளமாகவும், பல்வேறு அடுக்குகளாகவும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டம் பறந்துகொண்டிருந்த திசை நோக்கி வேகமாக காற்று வீசியது. அப்போது சிறுவன் பட்டத்தை கெட்டியாக பிடித்து இருந்துள்ளான். இதனால் காற்று வீசியதுடன் சிறுவன் பட்டத்தோடு சேர்ந்து பறந்துள்ளார். சுமார் 30 அடி உயரம் வரை பட்டதோடு பறந்துள்ளார்.
இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறுவனை மீட்க போராடி உள்ளனர். அவரிடம் பட்டத்தை இறுக்கமாக பிடித்துக் கொள் காற்றின் வேகம் குறைந்தவுடன் கீழே வந்து விடுவாய். அப்போது நாங்கள் உன்னைப் பிடித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் பட்டமானது சிறுவனின் எடையை தாங்க முடியாமல், சிறுவனின் ஒரு பகுதி மட்டும் தனியாக அறுந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் சிறுவன் வேகமாக கீழே விழுந்துள்ளார். அப்போது கீழே இருந்த மக்கள் சிறுவனை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சிறுவன் கீழே விழுந்ததால், அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை. இதையடுத்து சிறுவனின் உடலில் எலும்புகள் முறிந்துவிட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
சிறுவன் விரைவில் மீண்டு வருவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பட்டம் விடுவது என்பது சில சமயங்களில் எத்தகைய ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
https://youtu.be/08S-1YIUQzs