Categories
தேசிய செய்திகள்

‘போதும்! போதும்! உங்கள் நாடகம்’… ஜேபி.நட்டா-க்கு பதிலடி கொடுத்த மம்தா…!!!

நாட்டில் அனைத்து மத்திய படைகளையும் வசம் வைத்திருக்கும் பாஜகவுக்கு தனது கட்சித் தலைவரை பாதுகாக்க முடியவில்லையா என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சென்றிருந்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜேபி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்த விஷயத்தில் பாஜக தலைவர் நாடகமாடுகிறார். அவரது கார் அணிவகுப்பில் உள்ள ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்தியதால், பொது மக்கள் ஆத்திரத்தில் கற்களை வீசி இருக்கலாம். அனைத்து மத்திய படைகளையும் தனது வசம் வைத்திருக்கும் பாஜகவால், தனது கட்சி தலைவரை மேற்கு வங்க சுற்றுப்பயணத்தின் போது பாதுகாக்க முடியவில்லையா?.

இத்தனை பாதுகாப்பு இருந்தும் உங்கள் தலைவர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த முடியுமா? விபத்துக்கு பிறகு பொது மக்களின் கோபத்தின் விளைவாக இருக்கலாம். ஒரு சிறிய சம்பவமாக கூட இருக்கலாம். ஒரு தேநீர் கடையில் உங்கள் வாகன அணிவகுப்பில் இருந்து 50 கார்களில் ஒன்று யார் மீதாவது எடுத்திருக்கலாம். அல்லது ஏதேனும் வீசப்பட்டு இருக்கலாம். காவல்துறை விசாரணை நடத்தும். நீங்கள் கூறும் பொய்களை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். போதும் போதும்…”என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |