இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நடித்துள்ளாராம்.
தமிழ் திரையுலகில் பிரபலமான 9 இயக்குனர்கள் இணைந்து நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்குகின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்க்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனால் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த குறும்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை பிரியாகா மார்டின் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிசாசு’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.