Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓய்வெடுத்து விட்டு செல்கிறேன்… நோ ப்ராப்ளம்… மு.க.ஸ்டாலின்…!!!

திமுக தலைவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து அருகேயிருந்த ‘பார் ஆர்த்தோ’ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு உடனடியாக அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ரத்த அழுத்தம் அதிகமானதால் திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். தற்போது அவர் நல்ல உடல் நிலைக்கு திரும்பியுள்ளார்.அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், சிறிது “சோர்வாக இருந்தது. ரத்த அழுத்தத்தை சோதித்து பார்க்க சொன்னார்கள். பார்த்தேன். மருத்துவர்கள் 10 நிமிடம் ஓய்வெடுக்க சொன்னார்கள். மற்றபடி எதுவும் இல்லை. ஓய்வெடுத்து விட்டு செல்கிறேன். நோ ப்ராப்ளம்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |