பெண் ஒருவர் தன் வீட்டின் அருகில் ஒலித்த மணி சத்தத்தை நிறுத்த கூறியது அந்த ஊர்மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள Plan-las-quates என்ற கிராமத்துக்கு பெண் ஒருவர் புதிதாக குடி பெயர்த்துள்ளார். அந்த பெண் வசித்து வந்த வீட்டின் அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள ஒரு மணி இரவும் பகலுமாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண், அந்த சத்தம் தன் தூக்கத்தை கெடுப்பதாக கூறி இரவில் மட்டுமாவது அந்த மணியை நிறுத்துமாறு ஊர் மக்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கையை கேட்டு அந்த கிராமமே பொங்கி எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த மணியை நிறுத்த எதுவும் செய்யக்கூடாது என்று 300 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் பழங்கால பொருட்களை பாதுகாக்கும் கூட்டமைப்பின் தலைவரான Jean-Claud என்பவர் இது குறித்து கூறுகையில், “நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் மக்கள் மக்கள் சேவல் கூவுவதால் எரிச்சலடைவதைப்போல இந்த சத்தம் உள்ளது” என்று கூறி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த மணி உணர்வுபூர்வமாக அந்த கிராம மக்களோடு இணைந்தது என்று ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 120 வருடங்களாக ஒலித்து வருகிறது. ஆனால் இன்றுவரை யாரும் அதை குறித்து புகார் செய்வதில்லை என்றும் அக்கிரம மக்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்தான் தான் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேயர் மூலமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக எலக்ட்ரானிக் உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு இருந்து, மக்களுக்கு பழகிப்போன மணி ஒலி போன்ற சத்தங்கள் சுவிஸ் மக்களின் கலாசாரத்துடன் இணைந்து என்பதுடன், அவற்றை சுவிஸ் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.