Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ … விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு… வெளியான தகவல்கள்.‌..!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். 1996 ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இன்றுவரை தொடங்கப்படவில்லை.

இதனிடையே இந்த படம் கைவிடப்பட்டதாகவும் இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதனை படக்குழு மறுத்தது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட நடிகர் கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |