Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் போட்டிருக்கும் பிளான்… என்ன தெரியுமா? …!!

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்திற்காக புதிய திட்டம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் காண ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகுமா ?தியேட்டரில் வெளியாகுமா? என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து நடிகர் விஜய் ஒரு திட்டம் போட்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் விஜய் பேட்டி கொடுக்கவும் , தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் விசிட் அடிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |