தலையில்லாத பாம்பு ஒன்று தன்னை தாக்குபவரை தேடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு தலையில்லாத பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். இதை பார்த்த அவர் jakonoble என்ற பெயரில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் அந்த நபர் தன்னிடம் இருந்த டென்னிஸ் மட்டையால், தலையில்லாத பாம்பை அசைத்து பார்த்துள்ளார். இறந்து கிடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பாம்பு தலை இல்லாத நிலையிலும் தன்னை தாக்குபவரை தேட முயன்றுள்ளது.
அந்த பாம்பு அவர் எங்கே இருக்கிறார் என தேடி நோக்கி அவரை நோக்கி வர முயல்வதே இந்த வீடியோவில் காணலாம். இது குறித்து அந்த நபர் கூறுகையில், “பறவைகள் ஏதாவது அந்த பாம்பை கவ்வி செல்லும்போது தப்ப முயன்ற அடந்த பாம்பு தலையை இழந்து கீழே விழுந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.